?!?!?!?!?!


வேலி நிலம் பறித்தபோது
விலகி நின்றான்

அய்யோ பாவம் என்றோம்...

கூரை வீட்டைக் கலைத்தபோது
கலங்கி நின்றான்
அவனைக் கோழை என்றோம்...

கொண்டவள் கற்பைச் சிதைத்தபோது
கொதித்து நின்றான்
இன்னும் இல்லையா கோபம் என்றோம்...

இத்தனைப் பட்ட பின்,
வீறு கொண்டு
வில்லேந்தி வந்தான்
அவனையே மாவோயிஸ்ட் என்கிறோம்...?!

2 comments:

தினைக்குளம் கா.ரமேஷ் said...

அருமையான கவிதை...!
எதிர்ப்பின் போதெல்லாம் அடக்கத்தான் நினைக்கிறதே தவிற, அத்ற்கான காரணத்தை ஆராய நினைப்பதில்லை இந்த உலகம்...

sofi said...

நன்றி

Post a Comment