என் பிள்ளைத் தமிழ் (Click to View)


~ ~ என் பிள்ளைக்கான என் தமிழ் ~ ~

1. புதிர்

ஏழு திங்கள்
மூடித் திளைத்த புதிர்
இன்னும் மூன்றே மாதத்தில்
முடிச்சவிழ்க்கும்
நீ
என் அவனா
என் அவளா
என்று....

 
2. மழை வெறுத்தேன்

ஜன்னல் வழி
தூவித் தெறித்த சாரலும்...
கூந்தல் நுனி
தேடிப் பனித்த தூறலும்...
சேர்ந்தே சதி
கூடி விதைத்தக் காய்ச்சலால்...
தேகம் வழி
நோவு வதைத்தது உன்னையோ...
என் பிள்ளையே...!!!
முதல் முறை
மழை வெறுத்தேன்...!!!

1 comments:

Madhevan A said...

Loved it.

Post a Comment