மாற்றார் தோட்டத்து மல்லிகைகள் (Click to View)

~ மூளை தட்டிய முத்துக்கள் ~

நீண்ட நெற்றியில்
மிளிரும் மடிப்புகளாய்
தொடராத துயிலினில்
இமைக்காத இமைகளாய்
சூடேறிய சிறுமூளையது
காய்ச்சிய காற்றை
மூச்சும் முனங்கலுமாய்
நொண்டியாடி நடையேற்ற
இகழா இதழ்கள்
சுரக்கும் சுரமது
வீண்போகாது விழுங்கப்பட
அகமேற்ற அக்னியை
புறம் புறங்கூறாது
தராசில் தடுமாற்ற
"என்று தணியுமிந்த
சுதந்திர தாகமென"
கானமியற்றிய கவிஞனின்
கண்ணான கண்மணியாய்
நொடிகளின் நாடியுடன்
மீட்டிய முயற்சிகளை
பண்ணென பகன்றேன்
"என்று சேருமெனை
ஆரைச்சியின் சாரமென !"

எழுதியவர்: ஐஸ்வரியா


~~ ! ~~

காதல் இல்லை...
இது காமம் இல்லை..
இந்த உறவுக்கு
உலகத்தில்
பெயரில்லை...!

*****************************
யார் என்று அறியாமல்
பெயர் கூட தெரியாமல்
இவனோடு
ஒரு சொந்தம்
உருவானதே....?!
(இந்த வரிகள் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. சரியாகச் சொல்ல வேண்டுமானால் இது என் நிலை :-) )

எழுதியவர்: நா. முத்துகுமார்  
( அவர் நேரடி அனுமதி இன்றியே அவரின் வரிகள் என் வலைப்பதிவில்...)
 
~~~  நீ ~~~

 மனம் என்னும் கடலினில்
நேசம் என்னும் அலைகளாய் நீ...!
*
எண்ணம் என்னும் ஏட்டினில்
நான் தீட்டிய ஓவியமாய் நீ...!
*
வாழ்க்கை என்னும் காவியத்தில்
என் தலைவனாக நீ...!
*
நான்கு திசையினிலும் நீ...!
என் நாணத்தின் காரணமும் நீ...!
*
எங்கும் நீ
எதிலும் நீ
எப்பொழுதும் நீ
என்று நான் ஏங்கிய சமயம்
என் கனவுகளுக்கு
உருவமும் உயிரும் அழித்தது போல்
என் எதிரில் வந்தாய் நீ...!

எழுதியவர்:  வர்ஷா
( தூரிகைப் பிடித்த விரல்களின் வார்த்தை ஓவியம் )

~~~கர்சீப்~~~


மலர் கரங்களைப்
பற்றுகையில்...
முள்ளாய்க் குத்தியது
கர்சீப்...!!!

எழுதியவர்:
அஜய் மணிகண்டன் (படத்தில் இருப்பவர்)

3 comments:

Unknown said...

Aaaha aaha arumai arumai!!!!!!!!!!!!!!!!

RevathiRajkumar said...

Cha... Chanceless.... Yeppadinga Mani... Kavithai aruvimathiri Kottudhu poolae...

Vanajakkshi said...

aagaa aagaa aagaa !!! padaathil iruppavar ah !!! pakkathula kaanamal ponavar patriya arivippu nu podalaam pola irukku ;)

Post a Comment