Bagavathy
சென்ற ஆண்டு விடுத்த சபதம்
கனவாகிப் போகும்...!!!
ஓர் ஆண்டாய்த்
தொடுத்த கனவு
சபதமாய் ஆகும்....!!!
Bagavathy
நான் பருவம் கொண்ட பின்னும்
தேடாதக் காதலை
என் ப்ரசனத்திலும்
அவள் பிறன் மனம்
நாடியத் தனிமையினால்
தேடுகிறேன்....!!!!
Bagavathy
பிறந்தநாள் அன்றி சத்தியமாய் வேறெதுவும் பொருந்துவதாய் இல்லை எனக்கும் ஏசுவிற்கும்...! :)
Bagavathy
அப்பாவின் கோபத்தின்
அடுத்தக் கேள்வியைச்
சரியாக யூகித்து
அவசர அவசரமாய்க்
கிழித்தேன்
பல மாதங்களாய்க்
கிழிக்காமல்
விட்டுப் போன
நாட்காட்டியை....!
Bagavathy
வனாந்திரம் முழுமைக்கும் எப்படி நான் குடை பிடிப்பேன்....?நீ நடந்தச் சுவடுகள் தேடி அள்ளிச் சென்றது மழை....!