அவளாக 'பிடில் (எ) வயலின்'


அவள் மொழியோடு
என் மௌனம்
இணைவதாய்
ஒரு சொப்பனம் !

என் தனிமையில்
இயல்பாய்
இயைகிறாளே
இது என்ன நூதனம் !


கனவோடு
உறவாடும்
கவிதைகள்
இல்லை என்றா...
இரவினையே
கூறுபோடும்
கீதத்தை
மொழிய நின்றாய் !

என் தூக்கத்தை
வருடுகின்ற
மயிலிறகு
இல்லை என்றா...
ஆழ்மனதின்
ஸ்பரிசம் தொடும்
சங்கீதம்
பாட வந்தாய் !

ஓர் உயிரை
ஈருடலாய்
கூடு பிரித்து
உயிர் தாங்கி...
ஏந்தும் என் விரலின்
ஏக்கம் வாங்கி
உரசுகையில்
ஸ்வரம் தந்தாய் !

தோள் கொண்டு
உனைத் தாங்கி
விரல் கொண்டு
உடல் மேவி...
மறு கையால்
உன் துணை தாங்கி
தொடும் போதே
மூச்சளித்தாய் !

நெஞ்சுக்குழியின்
விம்மல் வங்கி
நடுங்கும் துடிப்பின்
வேகம் தாண்டி...
கண்கள் பேசும்
தண்ணீர் மொழியை
உன் நரம்பின் வழியே
மொழிய விழைந்தேன் !

நெஞ்சின் உதிரம்
தகிக்கும் நிலையில்...
மொழிகள் விடுமுறை
எடுக்கும் நொடியில்...
கண்கள் மட்டும்
மொழியும் தருவில்...
என் தோழி என்றாகி
நீ மறு உருவில்....

அடி பெண்ணே !
என் மௌனத்தின் கூக்குரல்கள்
உனக்கு மட்டும்
தெரிந்ததெப்படியோ...?! 

1 comments:

Raja Mohammed R M said...

Hey sofi..I just saw your comment in my blog..Had no idea on how to contact you...so i ended up commenting here in yar blog...Thanks for your comments ( Well, I guess am replying you after 18months :P and am sorry for the delay). And i just saw yar blog....Wonderful wonderful poems....Hatsoff!
Want to know more about you, If you dont mind!

Post a Comment